LATEST NEWS
சித்தார்த்துடன் காதலை உறுதி செய்த நடிகை அதிதி ராவ்…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் வீடியோ….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சித்தார்.இவர் அவ்வப்போது இணையத்தில் பல சர்ச்சை பேச்சுகளிலும் சிக்கியுள்ளார்.இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வந்ததாகவும் திருமணம் வரை சென்ற இவர்களின் காதல் சில காரணங்களால் பிரிந்ததாகவும் தகவல் வெளியானது.
தற்போது நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அவர்கள் குறித்த புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அதிதி பிறந்தநாள் அன்று சித்தார்த் எனது இதயத்தின் இளவரசையே என்று பதிவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து இவர்களின் காதலை ரசிகர்கள் உறுதிப்படுத்தினர். இருந்தாலும் இருவரும் இது குறித்து மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். சமீப காலமாகவே இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாகவே சென்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று அவர்கள் ஜோடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.
லவ்லி ஜோடி என ஒரு போட்டோகிராபர் கூற அதிதி அதற்கு ஸ்மைல் மட்டுமே செய்துள்ளார். அதனால் சித்தத்தை அவர் காதலித்து வருவதை மறைமுகமாக உறுதி செய்து விட்டார் என குறிப்பிட்டு அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
