CINEMA
கணவரோடு விவாகரத்தா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஐஸ்வர்யா ராய்…!!

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்து கொள்ள போகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவி வந்தன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தார்கள். மேலும் இதற்கு ஆதாரமாக திருமணத்தின்போது, அபிஷேக் அணிவித்த மோதிரத்தை ஐஸ்வர்யா கழற்றி விட்டார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா கையில் திருமண மோதிரம் அணிந்து இருந்தார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.