LATEST NEWS
டால்பினுடன் ஜாலியாக விளையாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்… டால்பினை விட நீங்க சேட்டை ரொம்ப பண்றீங்களே… இதோ வீடியோ…
தமிழ் சினிமாவின் டஸ்கி ஸ்கின் அழகியாக ரசிகர்களை மனதை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ‘நீதானா அவன்’ என்ற படத்தில் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார்.
இதை தொடர்ந்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. தற்பொழுது தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தனித்துவமான கதாபாத்திரங்களில் நடைபெறும் ஐஸ்வர்யா ராஜேசுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பர்ஹானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தற்பொழுது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் டால்பினுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
