LATEST NEWS
திருமணம் முடிந்து 7 வருடத்தில் விவாகரத்து பெற்ற நடிகை பானுப்பிரியா…. முன்னாள் கணவரின் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா. இவர் நடிகை என்பதையும் தாண்டி தன்னை ஒரு சிறந்த நடன கலைஞராகவும் காட்டியுள்ளார். 90களில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியவர்.
இவர் கிட்டதட்ட 150 படங்களுக்கு மேல் நடித்திருந்தும் தற்போதும் தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே கடந்த 1998 ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலான இவருக்கு அபிநயா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் பானுப்பிரியா தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். என் நிலையில் பானுப்பிரியாவின் முன்னாள் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
