‘பாளையத்து’ அம்மன் படத்தில் நடித்த நடிகையா இவர்?… இப்ப எப்படி இருகாங்க தெரியுமா?…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பாளையத்து’ அம்மன் படத்தில் நடித்த நடிகையா இவர்?… இப்ப எப்படி இருகாங்க தெரியுமா?….

Published

on

தமிழில் 2000ல் வெளிவந்த பாளையத்து அம்மன் திரைப்படத்தில் நடித்து அசத்தியவர் நடிகை திவ்யா உன்னி. 1987ல் இருந்து படங்களில் நடித்து வரும் திவ்யா பெரும்பாலும் மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் தமிழில் பாளையத்தம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இத்திரைப்படத்தின் மூலம் நடிகை திவ்யா உன்னிக்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர். ஆனால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் 2002ல் சுதீர் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2017 விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Advertisement

இவர்களுக்கு அருண் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். பின் கடந்த 2018 இல் அருண்குமார் என்பவரை நடிகை திவ்யா உன்னி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் குழந்தை ஒன்றும் பிறந்தது.

இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது மூன்று பிள்ளைகள் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை திவ்யா உன்னி.  சமீபத்தில் இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு பாளையத்து அம்மன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேட்டியளித்திருந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘ ‘பாளையத்து அம்மன்’ திரைப்படத்தில் நடித்த நடிகையா இவர்?  இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in