நாம் மீண்டும் சந்திக்கும் வரை…! “மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் நேர்ந்த சோகம்”…. முக்கிய நபர் மரணம்..!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நாம் மீண்டும் சந்திக்கும் வரை…! “மீரா ஜாஸ்மின் குடும்பத்தில் நேர்ந்த சோகம்”…. முக்கிய நபர் மரணம்..!!!

Published

on

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் மீரா ஜாஸ்மின். ரன் என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து விஜயுடன் சேர்ந்து புதிய கீதை, விஷாலுடன் சேர்ந்து சண்டக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

#image_title

இந்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்து நிலையில் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளங்களில் பிரபல நடிகையாக வளம் வந்தார். சினிமாவில் டாப் ஹீரோயினியாக இருந்த போது 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

#image_title

9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது தமிழில் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு சோகமான செய்தியை பகிர்ந்து இருக்கின்றார். அது என்னவென்றால் நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் மற்றும் திரையரங்கினார் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Meera Jasmine (@meerajasmine)

Advertisement
Continue Reading
Advertisement