CINEMA
பல வருடங்களுக்கு முன்பே அந்த நடிகரோடு நடிக்க மறுத்த நயன்தாரா… என்ன காரணம் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டெஸ்ட். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு தரவில்லை. அடுத்ததாக மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்ஸி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ஜவான் படத்தின் மூலமாகத்தான் பாலிவுட் ஹீரோயின் ஆக அறிமுகமானார் நயன்தாரா. ஆனால் இதற்கு பல வருடங்கள் முன்பு ஷாருக்கான் நடித்த வெளிவந்த படம் சென்னை எக்ஸ்பிரஸ். இந்த படத்தின் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடித்திருப்பார்.
ஆனால் முதன் முதலில் இந்த ரோலில் நடிக்க இருந்தது நடிகை நயன்தாரா தானாம். படத்தின் கதை இந்தியாவில் நடக்கும்படி அமைந்திருந்ததால் அப்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக இருந்ததால் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். புதிய பாலிவுட் படத்தில் உடனடியாக நடிக்க ஒப்புக்கொள்ள நயன்தாரா தயங்கியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கால்ஷீட் பொருந்தாததும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் நயன்தாரா அந்த படத்தின் நடிக்க வில்லையாம்.