90’ஸ் பிரபல நடிகை ஊர்வசி மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வீடியோ பார்த்து வாழ்த்து கூறும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

90’ஸ் பிரபல நடிகை ஊர்வசி மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வீடியோ பார்த்து வாழ்த்து கூறும் ரசிகர்கள்…

Published

on

தென்னிந்திய சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக இவரது பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இயக்குனர் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .இதை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஊர்வசி. இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் என்பவரை 2000ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

Advertisement

8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து இவரது மகள் அப்பாவுடன் சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி சிவப்பிரசாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்பொழுது குடும்பம், கேரியர் என்று சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்பொழுது படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக உள்ளார். தனது மகனுக்கு இஷான் என்று பெயர் சூட்டி உள்ளார். தனது 45 வயதில் இரண்டாவது திருமணம் செய்து 46 வயதில் மகன் இஷானை பெற்றெடுத்துள்ளார். தற்பொழுது நடிகை ஊர்வசி தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Urvasi Sivaprasad (@therealurvasi)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in