LATEST NEWS
ஒத்த போட்டோவை போட்டு மொத்த ரசிகர்களையும் கலங்க வைத்த… சீதாராமன் சீரியல் நடிகை பிரியங்கா…!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி. ஹைதராபாத்தை சேர்ந்த இவர் தனது 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்திங் சம்திங் மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதன் பிறகு இவருக்கு சினிமாவின் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சின்னத்திரை சீரியல் பக்கம் சென்ற இவருக்கு சீரியல்களில் அதிக வாய்ப்புகள் கிடைத்தன.
தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகின்றார். இதனிடையே தனது நீண்ட நாள் காதலரை திடீரென இவர் சமீபத்தில் மலேசியாவில் கோவிலில் திருமணம் முடித்தார்.
இந்நிலையில் சீதாராமன் தொடரிலிருந்து தான் விலகுவதாக கூறி அவர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். இறுதியாக சீதாராமன் கெட்டப்பில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.
