LATEST NEWS
90’ஸ் முன்னணி நடிகை ராதாவின் மகள்களை பாத்துருக்கீங்க… மகனை பாத்துருக்கீங்களா?… மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நடிகை ராதா வெளியிட்ட வீடியோ இதோ …
தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. அதன்பின் கமல் ரஜினி உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார். சுமார் 10 வருடங்களாக கனவு கன்னியாக நீடித்தார். இவர் தான் நடிக்க வந்த 6 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் நடித்தது மட்டும் அல்லாமல் பத்து ஆண்டுகளில் 162 படங்களுக்கு மேல் நடித்து சாதனையும் படைத்தார்.
நடிகை ராதா ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1991ஆம் ஆண்டு வெளிவந்த ‘Innathe Program’ எனும் மலையாள படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
இவர் 1991ல் ஹோட்டல் அதிபர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இரண்டு மகள்களும் விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் நடிகையாக அறிமுகமானார்கள். ஆனால் இருவருக்குமே எதிர்பார்த்து அளவிற்க்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ராதா. இவருக்கு 2 மகள்கள் இருப்பது பலருக்கும் தெரியாது. ஆனால் நடிகை ராதாவின் மகனை பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. தற்பொழுது இவர் தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
