திரையுலகில் 45 வருடங்களை நிறைவு செய்த நடிகை ராதிகா… பிரபல நடிகையுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ… - cinefeeds
Connect with us

LATEST NEWS

திரையுலகில் 45 வருடங்களை நிறைவு செய்த நடிகை ராதிகா… பிரபல நடிகையுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ…

Published

on

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.

Advertisement

 

வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.  இவர் ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் சீரியல்களை இயக்கி தயாரித்து வருகிறார் . தற்பொழுது வெள்ளித்திரை , சின்னத்திரை என பிசியாக நடித்து வருகிறார் நடிகை ராதிகா.

Advertisement

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ராதிகா. இவர் இன்றுடன் தனது திரைவாழ்க்கையில் 45 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகா, நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Tamilan Media (@tamilan_media_)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in