LATEST NEWS
சூப்பர் ஸ்டார் பாணியில் ரிஷிகேஷில் பயணம் மேற்கொண்ட நடிகை ரம்யா பாண்டியன்… வைரலாகும் வீடியோ…
தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆனால் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே மொட்டை மாடியில் தனது இடுப்பை காட்டி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஒரே இரவில் பிரபலமானார் .
அந்தப் புகைப்படங்கள் செம வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். ஆனாலும் ஒரு சில நெகட்டிவ்வான விமர்சனங்களும் கிடைத்தது. பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததால் இவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில் அவர் சமீபகாலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டாரை போல ஆன்மிக பயணத்தையும் மேற்கொண்டுள்ளார். அதாவது இவர் தற்பொழுது ரிஷிகேஷுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….
View this post on Instagram