LATEST NEWS
தலையில் மல்லிப்பூ , கையில்… ! அந்த மாதிரி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் பரத் பட நடிகை…!
‘ரிட்டு’ என்கிற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரீமா கல்லிங்கல். மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, திறமையான நடிகை என பெயர் எடுத்தவர். பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு மிகவும் துணிச்சலாக குரல் கொடுப்பது மட்டும் இன்றி, மனதில் பட்ட கருத்துக்களை மிகவும் போல்டாக பேசும் நடிகைகளில் ஒருவர். தமிழில் ரீமா கல்லிங்கள், நடிகர் பரத்துக்கு ஜோடியாக யுவா யுவதி என்கிற ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் திரையுலகில் தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இவர் மிஸ் கேரளா அழகு போட்டியில் பங்கு பெற்று முதல் ரன்னர் அப்பாக வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார் .மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு 2012 இல் வெளியான கேடயம் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளை பெற்றார்.நீலத்தாமரா, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், சிட்டி ஆப் காட், 22 ஃபீமேல் கோட்டயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2013 இல் கல்லிங்கல் மழவில் மனோரமா நிகழ்ச்சியான ‘மிடுக்கி’ மூலம் தொலைக்காட்சி தொகுப்பாளராக மாறினார்.
இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் கேரளாவில் கொச்சினில் தனது சொந்த நடன நிறுவனமான மாமாங்கத்தை நிறுவினார். இது கொரோனா தொற்று காரணமாக 2021ல் மூடப்பட்டது . நடிகை ரீமா இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர் பாலிவுட் வெப் சீரியசிலும் நடித்து வருகிறார். இவர் மாயநதி ,வைரஸ், நாரதன், நீலவெளிச்சம் போன்ற படங்களில் தயாரிப்பாளராக பணியாற்றினார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
View this post on Instagram
