20 வயதை எட்டிய நடிகை ரோஜாவின் மகள்… ‘அம்மாவை மிஞ்சும் அழகு’… லேட்டஸ்ட் வீடியோ வைரல்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

20 வயதை எட்டிய நடிகை ரோஜாவின் மகள்… ‘அம்மாவை மிஞ்சும் அழகு’… லேட்டஸ்ட் வீடியோ வைரல்…

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், பிரஷாந்த்தின் ஜோடியாக ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ரோஜா இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா 2014 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கினார்.

ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா இணையத்தில் மிகவும் பிரபலம் ஆனவர் தான். அவரது போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன. தற்போது அன்ஷு மாலிகா 20 வயதை தொட இருப்பதாய் நினைத்து தனக்கு கவலையாக இருப்பதாக குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Anshu (@anshumalikarojaselvamanioffcl)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in