VIDEOS
“இனி முடியாது”…. லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு அழுத நடிகை சதா…. என்ன நடந்தது தெரியுமா….???
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை சதா.தெலுங்கு மற்றும் கன்னட மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழில் ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் இவரின் முதல் படமே நல்ல வாய்ப்பை தேடி தந்தது. அதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
அவ்வகையில் எதிரி, வர்ணஜாலம்,அந்நியன் மற்றும் திருப்பதி உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் சதா தற்போது லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு இருக்கும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மும்பையில் earthlings cafe என்ற பெயரில் ஒரு ஹோட்டலை நடத்தி வந்துள்ளார். பல வருடங்களாக கடினமாக உழைத்து அந்த ஹோட்டலை அவர் பெரிய அளவில் வளர்த்து இருக்கும் நிலையில் திடீரென அந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்யும்படி கூறியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனால் இனி அந்த ஹோட்டலை நடத்த முடியாது என சதா கண்ணீர் விட்டு பேசியுள்ளார். மூடுவதை விட வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் என்று ரசிகர்கள் அனைவரும் அவருக்கு அட்வைஸ் கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
