LATEST NEWS
சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த ராஜா ராணி சீரியல் நடிகை… வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து , இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. முதல் பாகத்தில் நடிகை ஆலியா மானசாவும் சஞ்சீவும் இணைந்து நடித்து அசத்தியிருந்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிகை ஆலியாவே சந்தியா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வந்திருந்தார்.
பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகிய இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ராஜா ராணி சீரியலில் ஜெனி என்ற ரோலில் நடித்து இருந்தவர் சங்கீதா. தொடரில் அவரது ரோலுக்கு நல்ல முக்கியத்துவம் இருந்தது.
தற்போது நடிகை சங்கீதாவுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. ராஜா ராணி சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் அவரது திருமணத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.
தற்பொழுது இவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram