பிக் பாஸ் சீசன் 7 ல் நடிகை ஷகீலா?… காத்திருந்த தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்…. - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக் பாஸ் சீசன் 7 ல் நடிகை ஷகீலா?… காத்திருந்த தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம்….

Published

on

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’ இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.’பிக் பாஸ் சீசன் 6′ சென்ற வருடம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது  பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர்.

மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 7 –இல் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா,நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, வி.ஜே ரக்சன், ஜாக்லின், காக்கா முட்டை விக்னேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், மாடல் ரவி குமார், மாடல் நிலா,

Advertisement

நடிகை ரச்சிதா கணவர் தினேஷ், ரேகா நாயர், சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பப்லு, அகில், சோனியா அகர்வால் வி.ஜே. பார்வதி ஆகிய 18 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று  கூறப்பட்டு வந்தது. இதில் நடிகை ஷகீலாவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழில் விரைவில் 7ம் சீசன் தொடங்குவது போல தெலுங்கிலும் 7ம் சீசன் தொடங்கி இருக்கிறது. இன்று தெலுங்கில் பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்கி இருக்கிறது. வழக்கம் போல நாகர்ஜுனா போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார். தமிழில் குக் வித் கோமாளி ஷோவில் பங்கேற்ற நடிகை ஷகீலா பிக் பாஸ் தமிழ் ஷோவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கு பிக் பாஸ் ஷோவுக்குள் சென்று இருக்கிறார். தற்பொழுது தமிழ் ரசிகர்களுக்கு இது மிகபெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement