மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவை பாத்துருக்கீங்களா?… இதுவரை நீங்கள் பார்த்திடாத புகைப்படம் இதோ…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவை பாத்துருக்கீங்களா?… இதுவரை நீங்கள் பார்த்திடாத புகைப்படம் இதோ….

Published

on

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் நீங்காத ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  1963ல்  தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ என்ற திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.1976 இல் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உடன் ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ஸ்ரீதேவி இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ விருதையும்’ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர் திருமணத்திற்கு பின் நடிப்பதில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்து கொண்டார். பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின் இவர் நடித்த ஹிந்தி மற்றும் தமிழில் வெளியான ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 2017ல்  ‘மம்’ எனும் இந்தி திரைப்படத்தில் இவர் கடைசியாக நடித்தார். இது அவரது 300 வது திரைப்படம்.

நடிகை ஸ்ரீதேவி நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக துபாய்க்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு திருமணத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருந்த அவர் பிப்ரவரி 24 – 2018ல் துபாயில் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் உயிரிழந்தார். நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பம் பெரும் சோகத்தில் மூழ்கியது.

Advertisement

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி தற்பொழுது பாலிவுட்டில் கால்பதித்து கலக்கி வருகிறார். நேற்று நடிகை  ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அவரை நினைவுகூர்ந்து மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். ஸ்ரீதேவி ஷூட்டிங்கில் அவரது அம்மா மடியில் அமர்ந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு அவர் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in