LATEST NEWS
32 வயதில் திருமணம் செய்து கொள்ளும் நடிகை தமன்னா…. மாப்பிள்ளை யார் தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!
ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அது மட்டுமல்லாமல் தனது மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ படங்களில் எதுவும் கமிட்டாகவில்லை.கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இதனிடையே சமீப காலமாக தமன்னாவிற்கு திருமணம் என்று கூறி அடிக்கடி இணையத்தில் வதந்திகள் பரவி வந்த நிலையில் அதெல்லாம் பொய் என்று கூறி தமன்னா விளக்கம் அளித்து வந்தார்.
தற்போது மீண்டும் தமன்னாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. தனது வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை தான் திருமணம் செய்து கொள்வேன் என தமன்னா கூறி வந்த நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவரின் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அவருடன் தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதற்கு தமன்னா எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. எனவே இந்த திருமணம் குறித்த செய்தி உண்மைதான் என உறுதியாகி உள்ளது. தற்போது தமன்னா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படமும் வைரலாகி வருகிறது.
