விஜய்க்கு ஓகே சொல்லிட்டு, அஜித்துக்கு டாட்டா காட்டிய 40 வயது நடிகை… ஷாக்கான ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய்க்கு ஓகே சொல்லிட்டு, அஜித்துக்கு டாட்டா காட்டிய 40 வயது நடிகை… ஷாக்கான ரசிகர்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணிநடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். லலித் குமார் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த திரைப்படத்தில் சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு நடிகை திரிஷா விஜய் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இவர்களின் ஜோடியை 13 வருடங்களுக்குப் பிறகு திரையில் காண ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகை திரிஷா இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய அளவில் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

Advertisement

லியோ திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் நடிகை திரிஷா இந்த திரைப்படத்திற்கு கொடுக்க வைத்திருந்த கால் சூட்டை வேறொரு படத்திற்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா நடிக்க மாட்டார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதனைக் கேட்ட ரசிகர்கள் பலரும் விஜயின் லியோ திரைப்படத்திற்கு ஓகே சொல்லிட்டு அஜித் படத்துக்கு நோ சொல்லிட்டீங்களே என வருத்தத்துடன் கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in