பிக் பாஸ் சீசன் 7..! தன் மகள் கலந்து கொள்வதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த நடிகை வனிதா…! - cinefeeds
Connect with us

BIGG BOSS

பிக் பாஸ் சீசன் 7..! தன் மகள் கலந்து கொள்வதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த நடிகை வனிதா…! 

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது.

 

Advertisement

தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக ஜூலை 21 ஆம் தேதி  ‘அநீதி’ திரைப்படம் ரிலீசானதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

இந்நிலையில் நடிகை வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொள்ளவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இவர் தற்பொழுது நடிகையாகவும் வெள்ளித்திரையில் கால் பதிக்க உள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது இன்று மாலை தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் நடிகை வனிதா தன் மகள் பிக் பாஸ் செல்வதை புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

Advertisement

[irp]

Advertisement
Continue Reading
Advertisement