LATEST NEWS
Excuse me விசித்ரா…! தன் மகளின் படிப்பு பற்றி விமர்சனம் செய்த விசித்ராவுக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகை வனிதா…! வைரலாகும் வீடியோ…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் 7 வது சீசன் தொடங்கியது. இதில் விசித்ரா, விஷ்ணு, வினுஷா தேவி, சரவணன், பாவா செல்லதுரை, கூல் சுரேஷ், ஆயிஷா உதயகுமார், ஜோவிகா, ஐஷு, பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், ரவீனா, யுகேந்திரன், மணி சந்திரா, விஜய் வர்மா, அனன்யா, பூர்ணிமா ரவி, நிக்சன் என 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் விஜய் வர்மா இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தடவை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் நேற்று விசித்ரா அடிப்படை கல்வி எல்லோருக்கும் அவசியம் என கூற, அதற்கு ஜோவிகா ‘எல்லாருமே படிச்சிட்டு பெரிய ஆள் ஆகணும்றது இல்லை. நான் பேசிட்டு இருக்கேன் நீங்க நிறுத்துங்க’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் ‘படிப்பு என்கிற விஷயத்தால எல்லா பிள்ளைகளும் தப்பான வழியில் போறாங்க. அதை பற்றி பேச தான் நான் வந்தேன். நான் பேசிட்டு இருக்கேன் நீங்க நிப்பாட்டுங்க’ என விசித்ராவை ஆப் செய்தார். இப்படி நேற்று பிக் பாஸ் வீடு கலவரமாய் காணப்பட்டது.
[irp]
இதைத்தொடர்ந்து இன்று அவரது அம்மாவான நடிகை வனிதா ஜோதிகா தமிழ் படிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை விசித்ரா- விற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அந்த பதிவில் ‘நீங்கள் இப்போது என்ன சொல்ல விரும்புகிறீர்கள். குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த கனவுகள் உள்ளன. அவற்றை நம்புங்கள். பெற்றோர்களாகிய எங்களுக்கு வழிகாட்டுவது எங்களுக்குத் தெரியும். உங்கள் ஆலோசனைகளையும் தேவையற்ற ஆலோசனைகளையும் யாரும் உங்களிடம் கேட்கவில்லை .பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எது சிறந்தது என்பதை அறிவீர்கள். நீங்கள் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள், அதன்படி நடந்து கொள்ளுங்கள்’ என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
[irp]