யப்பா.. சிரிப்ப அடக்க முடியலடா…! புது லுக்கில் ஷாக் கொடுத்த நடிகை வனிதா விஜயகுமார்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

யப்பா.. சிரிப்ப அடக்க முடியலடா…! புது லுக்கில் ஷாக் கொடுத்த நடிகை வனிதா விஜயகுமார்…!

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது.

தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக ஜூலை 21 ஆம் தேதி  ‘அநீதி’ திரைப்படம் ரிலீசானதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

 

நடிகை வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 ல் கலந்து கொண்டுள்ளார் இது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நடிகை வனிதா வைஜெயந்தி IPS என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான போஸ்டருடன் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் போலீஸ் கெட்டப்பில் வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement