LATEST NEWS
யாருப்பா இது…..! சிட்டிசன் படத்துல நடிச்ச வசுந்தராவா?…. அடையாளமே தெரியலையே….. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் கமலஹாசன் நடித்த ஹேராம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் வசுந்தரா தாஸ். இந்தி நடிகையாக வளம் வந்த இவர் நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் விளங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹேராம் திரைப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் சிட்டிசன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிட்டிசன் திரைப்படத்தில் சக்கலக்க பேபி பாடல்களையும் பாடியுள்ளார். தொடர்ந்து நடித்து வந்த இவர் அதன்பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போனார். ஒரு சில திரைப்படங்களில் பாடி வந்த இவர் தற்போது ஒரு சில கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
மேலும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்று பேசி வருகிறார். சமீபத்தில் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றது. இதை பார்த்து ரசிகர்கள் அந்த திரைப்படத்தில் நடித்திருந்த வசுந்தராவா இது. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்களே என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
