திருமணம் முடிந்த 3 மாதத்தில் ….கையில் குழந்தையுடன் தாலாட்டு பாடிய குக் வித் கோமாளி புகழ்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

திருமணம் முடிந்த 3 மாதத்தில் ….கையில் குழந்தையுடன் தாலாட்டு பாடிய குக் வித் கோமாளி புகழ்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இதனிடையே தனது நீண்ட நாள் காதலியான பெண் சியா என்பவரை கடந்த செப்டம்பர் மாதம் புகழ் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் செல்லத்திற்கு தந்தையாகியுள்ளார் புகழ். அதாவது ஒரு நாய்க்குட்டியை வாங்கி இருக்கும் புகழ் அந்த செல்லத்திற்கு இகிமுஸ் என்று பெயர் வைத்துள்ளார்.

Advertisement

அந்த செல்லத்துடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தெய்வத்திருமகள் படத்தில் வரும் ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு என்ற பாடலை பேக்ரவுண்டில் ஓட விட்டுள்ளார். புதிய செல்லத்திற்கு தந்தையான புகழுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் ஜூனியர் புகழ் எப்போது வருவார் என ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Tv Pugazh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytvpugazh)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in