LATEST NEWS
அம்மாடியோ இத்தனை லட்சமா?…. நடிகர் விக்ரம் அணிந்திருந்த இந்த வாட்ச்சின் விலை எவ்வளவு தெரியுமா?… வாயை பிளக்கும் ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர். அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.
இவரின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தங்கலான் திரைப்படத்தின் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி மற்றும் திரிஷா அனைவரும் இந்தியா முழுவதும் பல நகரங்களில் சுற்றுப்பயணம் சென்று வருகிறார்கள். அவ்வகையில் சமீபத்தில் பிரமோஷன் பணிக்காக விக்ரம் கேரளா சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த வாட்ச்சின் விலை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது அந்த வாட்ச் ஹியூப்லோட் என்ற பிராண்டை சேர்ந்தது என்றும் அது 21 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் விலையை அறிந்த ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்தில் உள்ளனர்.
