அனுஷ்கா ரசிகர்களே உங்கள் ஏக்கத்திற்கு விடை…! வெளியான Good news…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அனுஷ்கா ரசிகர்களே உங்கள் ஏக்கத்திற்கு விடை…! வெளியான Good news…! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Published

on

இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இரண்டு திரைப்படம் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பை தரவில்லை. இதனால் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற இவர் ‘அருந்ததி’ திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு அதன்பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய், விக்ரம், சூர்யா, ரஜினி என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார் அனுஷ்கா.

இதனிடையே இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்த பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படம் இந்திய அளவில் பெரும் சாதனை படைத்து இவருக்கும் வெற்றியை தேடித்தந்தது. இவர் இறுதியாக 2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. உடல் பருமன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு செப்டம்பர் 7-ம் தேதி அனுஷ்கா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்துக்கு . ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisement

இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இவர் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர். மகேஷ் பாபு.பி இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரொமான்டிக் – காமெடி ட்ராமாவாக உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.20 கோடிக்கு பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.50 கோடி அளவில் வசூலை ஈட்டியது. இந்நிலையில், படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகை அனுஷ்காவின் ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement