இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா?…. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த சிறு வயது புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா?…. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும்சினேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் அடிக்கடி தங்களின் குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இந்நிலையில் சினேகாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in