தன்னைவிட 4 வயது மூத்த நடிகை திருமணம் செய்து கொண்ட பசங்க பட நடிகர் கிஷோர்…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தன்னைவிட 4 வயது மூத்த நடிகை திருமணம் செய்து கொண்ட பசங்க பட நடிகர் கிஷோர்…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்….!!

Published

on

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்த கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அண்மையில் வழங்கப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து துரோகி மற்றும் கோலி சோடா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து கிஷோர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனிடையே விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ப்ரீத்தி நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளர் மற்றும் மாடல் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் லட்சுமி வந்தாச்சு மற்றும் பிரியமானவள் போன்ற பல சீரியல்களிலும் நடித்த இவருக்கு தற்போது 34 வயது ஆகின்றது.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அண்மையில் அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில்  இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement

திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இதில் கிஷோர் ப்ரீத்தியை விட 4 வயது இளையவர் என்று குறிப்பிடத்தக்கது.

Advertisement

தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள்  இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in