க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான லுக்கில் ரசிகர்களை மயக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.

இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

Advertisement

இந்த சீரியலில் இவரின் கண்ணம்மா கதாபாத்திரம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் சினிமாவில் கவனம் செலுத்த போவதாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவர் திடீரென விலகினார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பினார். அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

Advertisement

இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ் அதிகரித்தனர்.

இவர் எப்போது படத்தில் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Advertisement

ஆனால் படத்தில் நடிப்பது தொடர்பாக இவர் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாததால் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறார் என புரிந்து கொள்ள முடிகிறது.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் எத்திராஜ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

Advertisement

கல்லூரி படிப்பை முடித்ததும் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த ரோஷினி அங்கு இரண்டு வருடம் வேலை செய்த பிறகு வேலையை விட்டுவிட்டு மாடலிங் துறைக்குள் புகுந்தார்.

அதன் பிறகு சின்னத்திரையில் கலக்கிய இவர் தற்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவுவது வழக்கம்தான்.

அதே சமயம் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு இவர் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

Advertisement

அவ்வகையில் தற்போது இவரின் சில க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in