VIDEOS
காதல் மனைவியின் பிறந்த நாள்… வேற லெவலில் வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் கணேஷ் வெங்கட்… க்யூட் வீடியோ…!!
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் உள்ள பல நட்சத்திரங்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவ்வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. தமிழில் அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். அதனைத் தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இருந்தாலும் இவருக்கென தனி ஒரு புகழை தேடி தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இவரின் மனைவி தான் நிஷா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் மறைமுகமானவர்தான் நிஷா. அதன் பிறகு பல டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவன் வேற மாதிரி மற்றும் நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கணேசுக்கும் நிஷாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் முதலில் காதலித்து வந்த நிலையில் காதலுக்கு இவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க இவர்களின் காதலும் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.
இதனைத் தொடர்ந்து தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை நிஷா சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் நேற்று நிஷா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், தன்னுடைய அன்பு மனைவிக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கணேஷ் வெங்கட் வேற லெவலில் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
