VIDEOS
“அடடா என்ன ஒரு அழகு”… துளி மேக்கப் இல்லாமல் அந்தப் பாட்டுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் ஜனனி… வர்ணிக்கும் ரசிகர்கள்..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர். தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் காரில் சென்று கொண்டிருந்தபோது இச்சி இச்சி இச்சி கொடு என்ற பாடலுக்கு ரீல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜனனி துளியும் மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகிய வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
