நடுக்காட்டில் லூட்டி அடித்த பிக்பாஸ் பிரபலங்கள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடுக்காட்டில் லூட்டி அடித்த பிக்பாஸ் பிரபலங்கள்…. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்….!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

அந்த சீரியலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான்.

Advertisement

இந்த சீரியல் மூலம் மீனாட்சி ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களிலும் வாழக்கூடிய பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.

அந்த சீரியலில் மிகவும் பிரபலமான இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ஹீரோயினியாக நடித்து பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்தார்.

Advertisement

சீரியலோடு நின்றுவிடாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

ரசிகர்களோடு எப்போதும் ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருந்தார். இவர் இன்ஸ்டால் பக்கம் மட்டுமல்லாமல் பேஸ்புக் பக்கமும் ரசிகர்களை உருவாக்கி அவரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றார்.

Advertisement

இன்று ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இவர் சீரியல் நடிகர் தினேஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பல வதந்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.  சமீபத்தில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரின் கணவர் இவருக்கு ஆதரவாக பல கருத்துக்களை பதிவிட்டார்.

Advertisement

 

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை காண தினேஷ் வராததால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததை ரசிகர்கள் உறுதிப்படுத்தினர்.

Advertisement

இந்நிலையில் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இவர் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறிய நிலையில் பிக் பாஸ் பிரபலங்களுடன் அடிக்கடி அவுட்டிங் சென்று வருகிறார்.

தற்போது அவர் மகேஸ்வரி, சிவின், ஏ டி கே ஆகியோருடன் அவுட்டிங் சென்ற நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.  அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in