LATEST NEWS
முகத்தில் துளி மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ஜனனி… பேரழகை வர்ணிக்கும் ரசிகர்கள்…!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் இலங்கை பெண்ணான ஜனனி. ஆரம்பத்தில் இவரின் நடவடிக்கைகள் ரசிகர்களை கவரும் விதமாக இருந்தாலும் ஏராளமானோர் ஜனனியை ஆதரித்தனர்.
தன்னுடைய எதார்த்தமான சிரிப்பாலும் குழந்தைத்தனமான செயல்பாடுகளாலும் பல ரசிகர்களுக்கு விருப்பமான ஒருவராக மாறினார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இந்தியாவில் வசித்து வரும் இவர் தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தளபதி 67 அதாவது லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது முகத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் அழகாத்தான் இருக்கீங்க என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
