LATEST NEWS
‘இந்த குழந்தைகளுக்குன்னு யாருமே இல்லை’… எமோஷனலாக பதிவு வெளியிட்ட பிக் பாஸ் சுஜா…
தமிழில் வெளியான கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், வாடீல் போன்ற படங்களில் நடித்தவர் சுஜா வருணி. பல திரைப்படங்களில் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார் சுஜா. வாத்தியார் திரைப்படத்தில் இவர் ஆடிய என்னடி முனியம்மா பாடல் இன்றுவரை மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் சுஜா வருணி.
உள்ளே சென்றதில் இருந்தே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றார் சுஜா.இவர் 2018ல் சிவாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிவாஜி தேவ், சுஜாவருணி தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்பொழுது வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார் நடிகை சுஜா வருணி.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பி பி ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் சுஜா வருணி. இவர் தற்பொழுது ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு , உடை உட்பட சில அடிப்படை உதவிகளை செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோவினை பார்த்த ரசிகர்கள் அவருடைய நல்ல மனதை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
