ரமலான் இஜ்திமா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக்பாஸ் விக்ரமன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரமலான் இஜ்திமா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக்பாஸ் விக்ரமன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வருடம் தொடங்கிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 21 போட்டியாளர்களின் இறுதிவரை சென்று மக்கள் மனதை கவர்ந்தவர் தான் விக்ரமன்.

Advertisement

இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் ட்விட்டரில் ஜாதி மதவெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்தவர்.

இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எவ்வித விமர்சனங்களுக்கும் உள்ளாகாமல் இறுதிவரை இருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் இவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு போட்டியாளர் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்கும் முதல் ஆளாக இவர் இருந்து வந்தார்.

இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறி வந்த விக்ரமன் அறம் வெல்லும் என்ற youtube சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் விக்ரமன், ஏ டி கே, ஷிவின், ராம் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

Advertisement

அதே சமயம் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் விக்கிரமன் அடிக்கடி பல வீடியோக்களை தொடர்ந்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றார்.

இந்நிலையில் விக்ரமன் அதாயி கல்வி குழுமம் சார்பில் நடைபெறும் ரமலான் இஜ்திமா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in