கேப்டன் தோனியின் கடைசி லீக் போட்டி…. சென்னை சேப்பாக்கத்தில் குவிந்த திரை பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கேப்டன் தோனியின் கடைசி லீக் போட்டி…. சென்னை சேப்பாக்கத்தில் குவிந்த திரை பிரபலங்கள்…. வெளியான புகைப்படங்கள்…!!!

Published

on

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது 16வது சீசன் ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை காண வரிசையாக சினிமா பிரபலங்கள் வந்து நேரில் கண்டு களித்து செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக சிஎஸ்கே மேட்ச் காண பலரும் வந்து ஆதரவு தருகின்றனர். கீர்த்தி சுரேஷ், திரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்களும் போட்டிகளை நேரில் கண்ட ரசித்தது தொடர்பான பல புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.

Advertisement

இந்நிலையில் நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடிய சென்னை அணி இதுவரை 6 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி களம் இறங்கியது. அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

இன்னும் உறுதி செய்யப்படாத தகவல் என்றாலும் நடப்பு தொடரில் சென்னை அணிக்காக சேப்பாக்கத்தில் தோனி பங்கேற்கும் கடைசி லீக் போட்டி என்பதால் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

எவ்வளவு விலை கொடுத்தாலும் இந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி ஏராளமானோர் ஸ்டேடியத்தில் குவிந்தனர். அதே சமயம் நேற்று நடைபெற்ற போட்டியை காண சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரை பிரபலங்கள் பலரும் குவிந்தனர்.

Advertisement

அதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் மகன்களுடன் போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.

அதனைப் போலவே நடிகை நயன்தாராவும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். மேலும் காமெடி நடிகர் சதீஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in