LATEST NEWS
அம்மா – அப்பாவின் 30வது திருமண நாள் கொண்டாட்டம்…. அழகிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் ஸ்ரேயா அஞ்சன்….!!!
தமிழ் சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வளம் வருபவர்கள் ஏராளம். அப்படி காதல் ஜோடிகளில் தற்போது தம்பதிகளாக இருப்பவர்கள் தான் ஸ்ரேயா மற்றும் சித்து தம்பதி.
இவர்கள் திருமணம் என்ற சீரியலில் ஜோடியாக நடித்த சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.
அந்த சீரியலில் இவர்களின் எதார்த்தமான நடிப்பு ஒட்டு மொத்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த சீரியல் கொரோனா காலப்பகுதியில் சென்று கொண்டிருந்ததால் விரைவில் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க ஆரம்பித்து பிறகு இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்க கதை எதுவும் சரியாக அமையாததால் தற்போது இருவரும் தனித்தனியாக ஜோடிகளுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா அஞ்சன் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
சமீபத்தில் இவரின் தங்கை பிரியா அஞ்சனுக்கு திருமணம் முடித்த புகைப்படங்கள் வைரலானது.
அவ்வகையில் ஸ்ரேயா அஞ்சனின் பெற்றோர் நேற்று 30ஆவது திருமண நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
