VIDEOS
டாப் நடிகைகளை மிஞ்சும் பேரழகு… மணப்பெண் போல ஜொலிக்கும் குழந்தை நட்சத்திரம் யுவினா… லேட்டஸ்ட் வீடியோ…!!!
நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் சிறுமி யுவினா. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து வீரம் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அதில் கயல் என்ற பெயரில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
2008 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த யுவினாவின் அப்பாவிற்கு தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதன்படி 2013 ஆம் ஆண்டு உறவுக்கு கைகொடுப்போம் என்ற சீரியலில் யுவினா நடித்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார்.
தமிழில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப்பை மற்றும் மேகா உள்ளிட்ட பல திரைப்படங்களில் யுவினா நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் அதிக அளவு நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் யுவினா தற்போது மணப்பெண் போன்று அலங்காரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அம்மாவை மிஞ்சிய அழகு என்று அனைவரும் அவரை வர்ணித்து வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
