காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு இவ்வளவு க்யூட்டான மகனா?… வெளியான குடும்ப புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு இவ்வளவு க்யூட்டான மகனா?… வெளியான குடும்ப புகைப்படங்கள்…!!

Published

on

தமிழ் சினிமாவை பொருத்தவரை காமெடி என்றாலே வடிவேலு, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் தான் நினைவுக்கு வரும்.

அதுவே பெண் காமெடி நடிகைகள் என்று கூறினால் அனைவரும் வருவது கோவை சரளாதான். இவர்களைத் தொடங்கி பெண் காமெடி நடிகையாக களமிறங்கியவர் தான் மதுமிதா.

Advertisement

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நகைச்சுவை தொடரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Advertisement

அதன் தொடர்ச்சியாக சன் டிவியில் பெரிய பாப்பா மற்றும் சின்ன பாப்பா என்ற தொடரில் நடித்து தனது அற்புதமான காமெடிகளை அதில் வெளிப்படுத்தி இருப்பார்.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Advertisement

இதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அங்கு பல்வேறு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொண்ட இவர் தற்கொலை செய்து கொள்ளக்கூட முயற்சி செய்தார்.

Advertisement

அதனால் பாதியிலேயே அந்நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறினார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து நடித்து வந்த இவர் சமீப காலமாக இதுவரை எதிலும் காண முடியவில்லை.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயயஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறினார்.

Advertisement

இவருக்கு கடந்த வருடம் மே மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது இவர் குழந்தை மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொண்டு வரும் நிலையில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஜாங்கிரி மதுமிதாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in