LATEST NEWS
சன்னி லியோனுக்கு டப் கொடுக்கும் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா…. ரசிகர்களை மயக்கும் கிளாமர் புகைப்படம்….!!!!
சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். அதனைத் தொடர்ந்து தற்போது ஓ மை கோஸ்ட் என்கின்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் சன்னிலியோனின் பேய் ரோலில் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் தர்ஷா குப்தா நடித்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சியில் சன்னிலியோன் சேலையில் வர தர்ஷா குப்தா மார்டன் உடையில் வந்துள்ளார். நீல நிறத்தில் கிளாமர் ஆடை அணிந்து சிக்ஸ்பேக் காட்டும் லுக்கில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
