CINEMA
தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து: ரெண்டு பெரும் ஆஜராகல…. நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ஆனால் தமிழ் படங்களே இவருக்கு பெரும் அளவில் வரவேற்பை பெற்று தந்து வருகிறது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடைசியாக ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.
தற்போது தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். பரஸ்பரம் விவாகரத்து கோரி மனு செய்திருந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்கு விசாரணையை அக்.19க்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.