CINEMA
பரஸ்பர விவாகரத்துக்கு நான் சம்மதிக்கவில்லை… அவரோடு சேர்ந்து வாழ ஆசை – ஆர்த்தி உருக்கம்…!!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சைரன். இந்த படம் சரியான வரவேற்பு பெறவில்லை. அதனை எடுத்து அவரிடம் சூப்பர் டூப்பர் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவகாரத்தை செய்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதிலிருந்து விவாகரத்துக்கான காரணம் குறித்து பலரும் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டா பதிவில்,ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்று ஆர்த்தி இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய நிலையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என்றேன். ஆனால், விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. இருப்பினும் சட்டரீதியாக எனக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.