CINEMA
கமல் – சல்மான் கான் கூட்டணியில் உருவாகவுள்ள அட்லியின் புதிய படம்…!!
பாலிவுட்டில் நடிகர் கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் இயக்குநர் அட்லி புதிய திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதை விவாதத்தில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றான். மேலும், இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளாராம். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ள இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.