வசமாக சிக்கிய அசீம்…. வச்சு வெளுத்து வாங்கிய கமல்…. வெளியானது இன்றைய முதல் ப்ரோமோ….!!! - cinefeeds
Connect with us

TRENDING

வசமாக சிக்கிய அசீம்…. வச்சு வெளுத்து வாங்கிய கமல்…. வெளியானது இன்றைய முதல் ப்ரோமோ….!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேற இதுவரை 11 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில் தனலட்சுமி வெளியேற போவதாக பல தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களை சந்திக்கிறார். அது தொடர்பான முதல் புரோமோ என்று வெளியாகி உள்ளது. அதில் மறைமுகமாக கமல்ஹாசன் அசீமை சுட்டிக்காட்டிய நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in