LATEST NEWS
நான் ரஜினிக்கு தான் ஆதரவு…..! கமலின் கொள்கைகள் எனக்கு பிடிக்காது…..! பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி…..!!!
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் எப்போதும் போட்டி இருக்கும். சினிமா ஆரம்பமான காலம் முதலே எம்ஜிஆர், சிவாஜி இருவரைப் போல அதைத் தொடர்ந்து வந்தவர்கள் தான் ரஜினி, கமல். கமல்ஹாசன் சினிமா துறையில் முதலாவது ஆக வந்திருந்தாலும். குறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். ரஜினி இவரின் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் இருவருக்குள்ளும் எந்த ஒரு போட்டியும், பொறாமையும் இருந்ததே கிடையாது.நட்பின் அடையாளமாக விளங்கி வருகிறார்கள். தற்போது கமல் அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அதேபோல ரஜினியும் அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று கூறி கடைசி வரை வந்த பாடு இல்லை. இருவரின் அரசியல் எண்ணங்கள் வெவ்வேறு.
இந்நிலையில் சமீபத்தில் அந்த காலத்தில் இருந்து ரஜினி கமல் ஆகியோருடன் நடித்து வந்த ஒய். ஜி. மகேந்திரன் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருந்தார்.மேலும் அவரிடம் நீங்கள் ரஜினி கமல் என்று இருவரும் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் யார் கட்சியில் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு. படார் என்று கட்டாயம் ரஜினி கட்சிக்கு தான் ஆதரவாக இருப்பேன்.
ரஜினி என் சொந்தக்காரர் என்பதால் நான் கூறவில்லை .கமலின் அரசியல் சிந்தனைகள் எனக்கு பிடிக்கவில்லை. ஆன்மீகத்தை நம்பாதவராய் இருந்தாலும் ஒவ்வொரு சமயங்களில் ஏதாவது ஒரு மதத்திற்கு ஆதரவாக பேசி தான் வருகிறார். ஆனால் எந்த காலத்திலும் எம்மதமும் சம்மதம் என்று இருப்பவர் ரஜினிகாந்த் என்று அவர் கூறியிருந்தார்.
