CINEMA
வீட்டு வேலையாட்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை… நடிகர் ஜெயம் ரவி குற்றசாட்டு…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாளுக்கு நாள் ஜெயம் ரவி குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜெயம் ரவி கோவாவில் கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியோடு நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் கெனிஷா எனக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜெயம் ரவி அளித்துள்ள பேட்டியில் எனக்கென்று தனியாக வங்கி கணக்கு இல்லை. வீட்டு வேலையாட்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட எனக்கு இல்லை. ஒவ்வொரு சின்ன செலவுக்கும் ஆர்த்தி என்னை கேள்வி கேட்டு அவமானப்படுத்தினார். என் மாமியார் தொடர்ந்து என்னை வைத்து படங்களை தயாரித்து நஷ்ட கணக்கை காட்டி ஏமாற்றினார் என்று கூறியுள்ளார்.