CINEMA
“வாழு வாழ விடு” 2 முறை ஆர்த்திக்கு அனுப்பினேன்…. விவாகரத்து விஷயம் குறித்து பேசிய ஜெயம் ரவி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம்ரவி. இவர் மோகன் ராஜ் இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இவர் கடந்த 2009 ஆம் வருடம் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சுமார் 15 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நாளுக்கு நாள் ஜெயம் ரவி குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ஜெயம் ரவி கோவாவில் கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியோடு நெருக்கமாக இருப்பதாகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரகசியமாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி பிறந்தநாளன்று ஆர்த்தி கணவரை பார்ப்பதற்கு பலமுறை முயற்சி செய்தார். ஆனால் கெனிஷா ஆர்த்தியை அனுமதிக்க வில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று பிரதர் பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம் ரவி, விவகாரத்து குறித்து இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். தனக்கு தெரியாமல் எடுத்த முடிவு என்று அவர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது. என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவது தவறானது ஆதரவற்ற அந்த பெண் பலருக்கும் உதவி செய்யும் சூழலில் அவரை இதில் தொடர்பு படுத்துவது தேவையற்றது. உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளிவரும். என்னை பொறுத்தவரை வாழு வாழ விடு என்று கூறியுள்ளார்.