ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறிய ‘குக் வித் கோமாளி’ மோனிஷா… குவியும் வாழ்த்துக்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறிய ‘குக் வித் கோமாளி’ மோனிஷா… குவியும் வாழ்த்துக்கள்…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் எத்தனையோ வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களுக்கு மேல் கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனின் வெற்றிக்கு முக்கிய காரணமே இந்நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் டைட்டிலே வின்னராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சீசனில் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் மோனிஷாவும் ஒருவர். இவர் குக் வித் கோமாளி சீஸன் 4 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார் .

Advertisement

மணிமேகலைக்கு பின்னர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கோமாளியாக வளம் வந்தவர் மோனிஷா. இவர் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மோனிஷா.

இவர் தற்பொழுது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அவர் விடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Monisha Blessy B (@monisha.blessy)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in