அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்த நடிகர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்த நடிகர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத பல திரைப்படங்கள் இன்றும் உள்ளன. அப்படி ரசிகர்கள் மத்தியில் இன்றும் நீங்காத இடம் பிடித்துள்ள ஒரு திரைப்படம் தான் அழகி. இயக்குனர் தங்கர் பச்ச இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ் மற்றும் தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சுமார் இரண்டரை கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்தவர் தான் நடிகர் சதீஷ். இந்தப் படத்தில் மட்டுமே நடித்திருந்து அவர் தற்போது சில பேட்டிகள் கொடுத்து வருகிறார். அவரின் லுக்கை பார்த்த ரசிகர்கள் அழகை படத்தில் நடித்தவரா இவர் என ஆச்சரியமாக கேட்டு புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement

இந்த திரைப்படத்திற்கு பிறகு சதீஷ் எந்த படங்களும் நடிக்கவில்லை. இருந்தாலும் பரத் நடித்த காதல் மற்றும் தனுஷின் தேவதையை கண்டேன் போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அதனை அவர் தவறவிட்டார். தற்போது அவர் நண்பர்களுடன் இணைந்து சொந்த தொழில் செய்து வரும் நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in